வலுவான எதிர்க்கட்சி தேவை என்கிறார் மோடி

வலுவான எதிர்க்கட்சி தேவை என்கிறார் மோடி

1 mins read

புதுடெல்லி: வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஜன நாயகத்திற்கு அவசியம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்துள்ளார்.

நாட்டின் 17ஆவது மக்களவை நேற்று முதல் முறையாகக் கூடியது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய நம்பிக்கைகளுடனும் கனவுகளுடனும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதாக அவர் கூறினார்.

"எதிர்க்கட்சிகளின் எண் ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்," என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண் டார்.

சுதந்திர இந்தியாவில் அண்மை யில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தான் அதிகமான பெண் வாக்காளர்களையும், எம்பிக்களை யும் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எம்பிக் கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முன்னதாக தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், நாட்டின் வளர்ச்சிக் காக அனைவரும் சோர்வின்றிப் பாடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

"130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றும் கட மையை தேசிய ஜனநாயக கூட் டணி எதிர்நோக்கி உள்ளது. தேச வளர்ச்சிக்காக சோர்வின்றி பாடு படுவோம். மாநிலங்களின் விருப் பத்தை நிறைவேற்றுவோம்," என்று மோடி தெரிவித்துள்ளார்.