நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் தேர்வு

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 2014ஆம் ஆண்டு தேர்தலைவிடத் தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைத்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு இரண்டாவது முறையாகப் பறிபோனது.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதால் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் தொகுதி எம்பியான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.