புல்வாமாவில் 9 வீரர்கள் காயம்

புல்வாமாவில் 9 வீரர்கள் காயம்

1 mins read

புல்வாமா: கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 40 'சிஆர்பிஎப்' வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாகக் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் '44 ராஷ்டிரிய ரைபிள்ஸ்' படையைச் சேர்ந்த வீரர்கள் நேற்று முன்தினம் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் வீரர்கள் சென்ற வாகனம் சேதமடைந்து 9 வீரர்கள் காயமடைந்தனர்.