விஜயவாடா: விஜயவாடாவிலுள்ள கனக துர்கையம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
அவரைப் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்ற ஆந்திர முதல்வர், மதிய விருந்து அளித்து உபசரித்தார். பின்னர் இரு மாநில முதல்வர்கள், அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மாநில பிரிவினைச் சட்டத்தில் உள்ள ஊழியர்கள் பங்கீடு, தண்ணீர்ப் பங்கீடு, மின் பாக்கி விவகாரம் போன்றவை குறித்தும் விவாதித்தனர்.

