எம்பியாக பதவி ஏற்றபின் கையெழுத்திட மறந்த ராகுல்

எம்பியாக பதவி ஏற்றபின் கையெழுத்திட மறந்த ராகுல்

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததையொட்டி 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மக்களவையின் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்பியாகப் பதவி ஏற்றார். பதவி ஏற்கும் எம்பிக்கள் அவைக் குறிப்பேட்டில் கையெழுத்திடவேண்டும். ஆனால், ராகுல் காந்தி அதனை மறந்து வெளியேற முயன்றார். அதனையடுத்து அருகில் இருந்து இதனைக் கவனித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராகுலுக்கு நினைவு கூர்ந்தார். அதன் பின்னர் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.