குழந்தைகள் பலி; போராட்டம் வெடித்தது

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமான குழந்தை கள் மூளைக்காய்ச்சலால் பலியான தையடுத்து அங்கு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாதத்தில் இதுவரை 103 குழந்தைகள் வரை அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் (ஏஇஎஸ்) எனும் மூளைக் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு இறந்துபோன தாகவும் அவர்களில் பெரும் பாலானோர் பத்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் என்றும் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் அதிகாரி கள் துரித நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் அக்கறை காட்ட வில்லை என்றும் குறைகூறி முஸாஃபர்பூரில் உள்ள முக்கிய மருத்துவமனையின் முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

குழந்தைகள் பாதிக்கப்பட்ட விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அம்மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தினூடே, இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நிலவரம் பற்றி கேட்டது காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது. அது வெளியானதையடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.

பிள்ளைகளின் மரணத்தைவிட கிரிக்கெட் போட்டி நிலவரம்தான் பீகார் சுகாதார அமைச்சருக்கு முக்கியமா என்று கேள்வியெழுப்பி, மங்கள் பாண்டே பதவி விலக வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பிள்ளைகள் இறப்ப தாக மற்றொரு எதிர்க்கட்சி தலை வர் ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

‘ஏஇஎஸ்’ நோய்த் தாக்கம் பற்றி விவாதித்த மற்றொரு கூட்டத்தில் சுகாதார, குடும்பநல துணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே உறங்கிக்கொண் டிருந்ததைக் காட்டும் புகைப்படமும் முன்னதாக வெளியாகியிருந்தது.

‘ஏஇஎஸ்’ காரணமாக அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகள் இறந்துபோன ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று பார்வையிடுவார் என்று கூறப்பட்டது. பிள்ளைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகு திக்குள் செல்ல செய்தியாளர் களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டது. கடந்த 1995லிருந்து ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பிள்ளைகள் இந்த நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

இதற்கிடையே, வெப்பக் காற்றால் பீகாரில் 184 பேர் மாண்டுபோனதையடுத்து, கயா வில் 144 தடையுத்தரவு விதிக் கப்பட்டுள்ளது. கயா, பாட்னா ஆகிய நகரங்களில் சனிக் கிழமை வெப்பநிலை 45 டிகிரி செல்சியசை எட்டியதையடுத்து அங்கு வெப்பக் காற்று வீசியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!