இந்தியில் பதவிப் பிரமாணம் - சோனியா கடும் அதிருப்தி

இந்தியில் பதவிப் பிரமாணம் - சோனியா கடும் அதிருப்தி

2 mins read
afe04eea-ecf2-4736-adcc-41ee93930062
இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதால் சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளி யாகியுள்ளது. -

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஒருவர் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதால் சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளி யாகியுள்ளது.

நாட்டின் 17ஆவது மக்களவை யின் முதல் கூட்டத்தொடர் தற் போது நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக உறுப்பி னர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக் குனில் சுரேஷ், மலையாளத்தை தவிர்த்து இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

எம்பிக்கள் பதவியேற்பின்போது தங்களது தாய்மொழியிலேயே அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கொடிக்குனில் சுரேஷ் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வில்லை.

அவர் இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பாஜக வினர் வரவேற்றனர். பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மேசையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொடிக்குனில் சுரே‌ஷின் இந்தச் செயல் காங்கிரஸ் மூத்த தலைவி சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. பதவி யேற்பு நிகழ்வுக்குப் பிறகு கொடிக் குனில் சுரேஷை வரவழைத்து அவர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர் களைச் சந்தித்த கொடிக்குனில் சுரேஷ், 'ஏன் இந்தியில் பதவிப்பிர மாணம் எடுத்துக்கொண்டீர்கள்?' என சோனியா காந்தி தம்மிடம் கேட்டதாகவும், அதற்கு கடந்த முறை ஆங்கிலத்தில் பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்டதால் ஒரு மாறுதலுக்காக இம்முறை இந்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக விளக்கம் அளித்த தாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019-06-20 06:00:00 +0800