2020ல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் பேர் சுற்றுலா செல்ல வாய்ப்பு எனத் தகவல்

2020ல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் பேர் சுற்றுலா செல்ல வாய்ப்பு எனத் தகவல்

2 mins read

புதுடெல்லி: எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செலலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உய ரும் என எதிர்பார்க்கப்படுவதாக அனைத்துலக சுற்றுலா அமைப்பு கள் தெரிவித்துள்ளன.

மிக விரைவில் இந்த அமைப்பு கள் சார்பில் சுற்றுலா தொடர்பான ஏழாவது அனைத்துலக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த அமைப்புகள் சில புள்ளிவிவ ரங்களை வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்திய சுற்றுலாச் சந்தையின் வர்த்தக மதிப்பு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுகள் 9 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

"சுற்றுலா மட்டுமல்லாமல் அனைத்துலகச் சந்திப்புக் கூட்டங் கள் மற்றும் நிகழ்ச்சிகளின் எண் ணிக்கையும், அதனூடேயான வர்த்தகமும் வளர்ச்சி காணும் என நம்புகிறோம்.

"குறிப்பாக நடப்பாண்டிலும் அடுத்த ஆண்டும் நிகழ்ச்சி ஏற் பாடு மற்றும் நிர்வாகத் துறையின் வளர்ச்சிக்கான அம்சங்கள் அதிக மாக உள்ளன. இத்தகைய நிகழ்ச் சிகளின் எண்ணிக்கை மட்டுமல் லாது, அவற்றில் பங்கேற்பவர்களும் அதிகரித்து வருவது நல்ல அறிகுறி," என்று சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கசகஸ்தான் சென்று வந்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு 15 ஆயிரம் பேர் மட்டுமே அங்கு சென்றனர்.

விமான போக்குவரத்துத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவது உலகை மேலும் சுருக்கி உள்ளது. எனவே சுற்றுலாத் துறையும் நிச்சயம் வளர்ச்சி காணும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.