1.65 பில்லியன்: 2059க்குள் உச்சத்தை தொடும் இந்திய மக்கள் தொகை; ஆய்வில் தகவல்

புதுடெல்லி: எதிர்வரும் 2059ஆம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகையானது அதன் உச்சத்தை எட்டிப் பிடிக்கும் என்றும், அப் போது இந்திய மக்கள் தொகை 1.65 பில்லியனாக இருக்கும் என் றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன. எனினும் அதன் பின்னர் மக்கள் தொகை சரியத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளையில் இந்தியா வுக்கு முன்பே சீனா, மக்கள் தொகையில் அதன் உச்சத்தை எட்டிப் பிடித்துவிடும் என்றும், அதன் பின்னர் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை கிடுகிடுவென உயரும் என்றும், மறுபக்கம் ஏனைய உலக நாடுகளில் மக்கள் தொகை சரிவு, முதுமை உள்ளிட்ட பிரச்சி னைகள் தலைதூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஆப்பி ரிக்க நாடுகளின் பங்களிப்பு 50 விழுக்காடாக இருக்கும் என்கி றார்கள் நிபுணர்கள். இதேவேளை யில் பெரும்பாலான ஆசிய, லத்தின் அமெரிக்க, கரிபியன், தென் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மக்கள் தொகையின் உச்சத்தை தொட்டு விடும் என் றும், அதன் பிறகு இந்த நூற் றாண்டின் இறுதிக்குள் அவற்றின் மக்கள் தொகை குறையத் துவங் கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. 2050ஆம் ஆண்டுக்குள் 65 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை இரு மடங்காக உயரும் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!