‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க கட்சிகள் மறுப்பு

புதுடெல்லி: ‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ என்றும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் சில புறக்கணித்தன.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங் கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மக்க ளவை, மாநிலங்களவையில் குறைந்தபட்சம் ஒரேயொரு உறுப் பினர் இருந்தாலும், அக்கட்சித் தலைவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என பிரதமர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேர்தல் குறித்து மட்டுமல்லா மல், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளும் கருத் துகளைப் பரிமாறிக்கொள்ள லாம் என்றும் தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு டன் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றும், மத்தியில் பிரதமர் மோடி பாசிச ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்துப் பேச மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டம் நடத்துவது நியாயமல்ல என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முதலில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எதற்காக மத்திய அரசு இவ்வளவு வேகமாக இத்திட்டத்தைச் செயல் படுத்த துடிக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ஆம் ஆத்மி சார்பில் அதன் பிரதிநிதி கலந்துகொண்டதாகக் கூறப்படு கிறது.

சில தலைவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், இந்தத் திட் டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக இருப்ப தாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!