சபரிமலை சட்டம்; மத்திய அரசிடம் மன்றாடும் கேரளா

சபரிமலை சட்டம்; மத்திய அரசிடம் மன்றாடும் கேரளா

1 mins read
0c04a5eb-5d35-43a4-ab85-fe9944eadfe7
-

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை கோவிலுக்குள் நுழைவதற்குக் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மீதான தடையின் நீக்கத்தைச் செயல்படுத்த அம்மாநில அரசு இந்திய மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.

பாரம்பரிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததை அடுத்து சில பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். ஆயினும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதால் கோவிலுக்குள் செல்ல விரும்பும் அந்தப் பெண்கள் இன்னும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலைமையைச் சரிசெய்ய கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கோரிக்கை விடுத்திருக்கிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில் இந்திய மத்திய அரசு புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.