மாயம் செய்ய நினைத்து இறுதியில் மாண்ட ஆடவர்

மாயம் செய்ய நினைத்து இறுதியில் மாண்ட ஆடவர்

1 mins read
104850b8-a0e9-49cb-a249-4140866b8fa8
-

பழம்பெரும் மாயாஜால வித்தைக்காரர் ஹெர்ரி ஹுடினியைப் போல் மாய சாகசம் செய்ய முற்பட்டு மாண்ட ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு ஆற்றில் இறக்கப்பட்ட சஞ்சல் லஹிரி என்ற அந்த ஆடவர் திரும்ப வெளிவரவில்லை என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

சஞ்சலின் சாகசத்தைக் காணச் சென்றிருந்த கூட்டத்தினர், கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கழித்து அவர் நீரிலிருந்து வெளிவராதபோது புகார் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சஞ்சலின் சடலம் பின்னர் ஆற்று அலைகளால் கரைப்பகுதிக்குத் தள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாக நீருக்குள் சாகசம் நிகழ்த்திய அனுபவத்தைக் கொண்ட சஞ்சல் வெளிவராதது சிலரை வியக்க வைத்ததாக பிபிசி செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது.