துபாய்: பெற்ற தாயை தன் மனை வியுடன் சேர்ந்து சித்திரவதை செய்து, பட்டினி போட்டு அவரது மரணத்துக்கு காரணமான மகனை துபாய் போலிசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் பணியாற்றும் தனது 29 வயது மகனை நம்பி அங்கு சென்றுள்ளார் அந்தத் தாய். ஆனால் 28 வயதான மருமகள் அவரைப் பற்றி அவ்வப்போது பல்வேறு புகார்களை எழுப்பி வந் துள்ளார்.
குறிப்பாக தங்களது கைக் குழந்தையை மாமியார் சரி வர கவனித்துக் கொள்ளவில்லை என்பது மருமகளின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்துள்ளது.
இதையடுத்து மகனும் மரு மகளுமாகச் சேர்ந்து 50 வயதை கடந்த அப்பெண்மணியை படாத பாடு படுத்தியதாகத் தெரிகிறது. அவரை இருவரும் சகட்டு மேனிக்கு அடித்து உதைத்ததுடன் சரிவர உணவளிக்காமல் பட்டினி யும் போட்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் வீட் டில் இல்லாத சமயத்தில் அந்தப் பெண்மணி பால்கனி பகுதியில் சுருண்டு விழுந்துள்ளார்.
அவர் மயக்கத்தில் இருக்கும் காட்சியைக் கண்டு பதறிப் போன அண்டை வீட்டில் வசித்த இந் தியப் பெண்மணி ஒருவர் ஆம்பு லன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அப் பெண்மணியை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பெற்ற தாயை ஆம்புலன்சில் ஏற்றுவதற்குக்கூட எந்த உதவியும் செய்யாத அப்பெண்மணியின் மக னும் மருமகளும் கண்டும் காணா மல் இருந்ததாக அண்டை வீட்டுப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடந்த விசார ணையின் போது பெற்ற தாய் என்றும் பாராமல், அவரது மகன் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவரைத் தாக்கியதும், அவரது உடலில் பல்வேறு எலும்பு கள் உடைந்து போயிருந்ததும் தெரிய வந்தது.
மேலும் உடல் முழுவதும் தீக்காயங்களும் காணப்பட்டன.
இது குறித்து விசாரித்தபோது தன் மாமியார் கைதவறி சுடுநீரை தன் மீது ஊற்றிக் கொண்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் மணியின் மருமகள் கூறியுள்ளார்.
கடைசியில், 29 கிலோ அள வுக்கு உடல் எடை குறைந்து சித்திரவதைகளை அனுபவித்த அந்தப் பரிதாபப் பெண்மணி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது மகன், மருமகள் இருவரையும் காவலில் வைக்குமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

