விபத்தில் சிக்கிய ஏழு குழந்தைகள் மாயம்

விபத்தில் சிக்கிய ஏழு குழந்தைகள் மாயம்

1 mins read

லக்னோ: கால்வாயில் வாகனம் ஒன்று கவிழ்ந்த விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அக்குழந்தைகளின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.

நேற்று முன்தினம் லக்னோ அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 29 பேர், ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு வேனில் இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கிராமத்தை நெருங்கிய வேளையில், அருகே உள்ள இந்திரா கால்வாய் பாலத் தின் மீது சென்று கொண்டி ருந்த வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இக்காட்சியைக் கண்ட சிலர் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பதறியடித்துக் கொண்டு வந்த கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் 22 பேர் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர்.

எனினும் 5 குழந்தை களை மட்டும் காண வில்லை. மாயமான 5 முதல் 10 வயதுக்குட்பட்ட அக் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்க லாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் பெற்றோர் தவிப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.