அதிபர்: எந்த வடிவிலும் ஊழலை அரசு ஏற்காது

அதிபர்: எந்த வடிவிலும் ஊழலை அரசு ஏற்காது

2 mins read
9db91d31-0592-4125-81b1-512edbb026bd
-

புதுடெல்லி: தொழில் முனை வோரை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்களைத் தீட்டுவதிலும் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக அதிபர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.நேற்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பயணம் தொடரும் என்று குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ள நடப்பு அரசு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும் என்றார்.

பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என அதிபர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.வேளாண்துறையில் ரூ.25 லட் சம் கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறை கேடுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"கருப்புப் பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77ஆவது இடத்திற்கு முன்னேற்றி உள்ளது. "உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது," என்றார் அதிபர் ராம்நாத் கோவிந்த். 2022ஆம் ஆண்டில் இந்தியா 'ஜி20' உச்சநிலை மாநாட்டை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார மையமாக மாற்றுவதே இலக்கு என்றும் தெரிவித்தார்.