சபரிமலை: புதுச்சட்டம் தேவை என்கிறார் கேரள அமைச்சர்

சபரிமலை: புதுச்சட்டம் தேவை என்கிறார் கேரள அமைச்சர்

1 mins read
9e5b9de5-57ed-461f-8a1f-10bb032af5e7
-

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கேரள தேவஸ்தான அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய சட்டத்தின் மூலம் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கொல்லம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இது விரைவில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில் இத்தகைய மசோதாக்களால் எந்தப் பலனும் இல்லை என அமைச்சர் சுரேந் திரன் தெரிவித்துள்ளார்.

"பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே பக்தர்களின் நம்பிக் கையைப் பாதுகாக்க புதுச் சட்டம் கொண்டு வருவது அவசியம். கேரள மாநில பாஜகவும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். "இதில் மாநில பாஜக தலைமை எந்தவித தயக்கமும் காட்டக் கூடாது," என்று தேவஸ்தான அமைச்சர் சுரேந்திரன் மேலும் கூறியுள்ளார்.