தேர்தலுக்குப் பிறகும் நீடிக்கும் அரசியல் மோதல்கள்

தேர்தலுக்குப் பிறகும் நீடிக்கும் அரசியல் மோதல்கள்

1 mins read
7b4d8258-509f-4a35-9c02-37fe1f86f460
-
Google News Preferred Icon

அமராவதி: தேர்தல் முடிந்த பிறகும் ஆந்திராவில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்தபாடில்லை. அங்கு குண்டூர் பகுதியில் உள்ள பொனுகுபடு கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஒரு சாலையின் நடுவே சுவர் எழுப்பியுள்ளனர்.

காரணம் அச்சுவருக்கு அப் பால் உள்ள வீடுகளில் வசிக்கும் அனைவரும் தெலுங்கு தேசக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும், தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்காத அவர்கள் குறிப்பிட்ட அச்சாலையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதே போல் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிமென்ட் சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி ஒய்எஸ்ஆர் தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். தங்களுக்கு வாக்களிக்காத அம்மக்கள் பத்து மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் ஆட்சியில் போடப்பட்ட அந்தச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த போலிசார், சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அமைதி திரும்பி உள்ளது.இதேபோல் மேலும் பல இடங் களில் இத்தகைய மோதல்கள் நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.