இந்தியாவுக்கு வியட்னாம் ஆதரவு

இந்தியாவுக்கு வியட்னாம் ஆதரவு

1 mins read
65c7ab1e-361a-4cc7-b825-caaf4529e3f1
-

புதுடெல்லி: ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக வியட்னாம் தெரிவித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வியட்னாம் ஏகமனதாக தேர்வாகிவுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கான ஆதரவை அந்நாடு வெளிப்படையாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் இந்தியாவுக்கு வியட்னாம் ஆதரவு அளித்துள்ளது என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுட்டிக்காட்டினார்.