பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்போது பொறுப்பேற்பார் என பிரியங்கா கேள்வி

பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்போது பொறுப்பேற்பார் என பிரியங்கா கேள்வி

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அப்பாவிகள் பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

அம்மாநிலத்தில் பலர் கொல்லப் படுவதாகவும், இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட் படுத்தப்படுவதாகவும் ஊடகங்க ளில் தகவல் வெளியானதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

"மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அரசாங்கமும் பெண்களுக்கான பாதுகாப்புக்கு எப்போது பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்? இம்மாநிலத்தில் உள்ள பெண்கள் பீதியில் உள்ளனர்," என்று பிரியங்கா சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை, பாலியல் பலாத் கார சம்பவங்கள் குறித்து ஊடகங் களில் வெளியான செய்திகளையும் அவர் தமது பதிவுடன் இணைத்து இருந்தார்.