கான்பூர்: அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் இரு ஆடவர்களின் காயங்களுக்கு டார்ச் லைட் ஒளியின் உதவியோடு மருத்துவர் தையல் போட்டு சிகிச்சை அளித்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் கான்பூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு ஆடவர்களுக்கு தலை உட்பட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
உள்ளூர் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியோடு மருத்துவர் தையலிட்டார். இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையின் நிலை குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அன்றைய தினம் மட்டுமே மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டர்கள் இயங்கவில்லை என அம்மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

