காவலரை தாக்கிய வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சருக்கு சிறை

காவலரை தாக்கிய வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சருக்கு சிறை

1 mins read

போபால்: காவலரைத் தாக்கிய முன்னாள் பாஜக அமைச்சருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்ற ஹரேந்தரஜித் சிங் பப்பு கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்ட காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்த ஆர்.எஸ்.பண்ட்ரே என்பவரை தாக்கினார் என்பது புகார்.

அச்சமயம் எம்எல்ஏவாக இருந்த அவரது வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், காவல் நிலையத்தில் புகுந்து காவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் சிங் ஹரேந்தரஜித் சிங்குக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.