தாமதம்: விமான நிறுவனத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம்

தாமதம்: விமான நிறுவனத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம்

1 mins read

சண்டிகர்: விமானம் புறப்பட தாமதமானதை அடுத்து பயணி ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர் வீரேந்திர சிங் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலம் சண்டிகர் செல்ல முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் அன்றைய தினம் காலை 6 மணியளவில் புறப்பட வேண்டிய விமானம், பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகும் புறப்படவில்லை. இதற்குரிய விளக்கத்தை விமான நிறுவனம் தமக்கு அளிக்கவில்லை என குறிப்பிட்டு அவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து விமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது நீதிமன்றம்.