புதுடெல்லி: சிறிய கடைகள், உணவகங்கள் போன்றவை, இணைய வசதிக்கான 'வைஃபை' சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இது குறித்து தொலைத் தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறிய போது, "முதலில் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான 'டிராய்' அமைப்புத்தான், இத்தகைய பொது வைஃபை இணையச் சேவையை வழங்க, 'பப்ளிக் டேட்டா ஆபீஸ்' எனும் வர்த்தக மாதிரியை முன்மொழிந்தது. இதற்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
"இருப்பினும் அரசு இத்தகைய வைஃபை சில்லறை விற்பனையின் மூலம் விரைவில் நாட்டை மின்னிலக்க மயமாக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது," என்றார்.

