பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக வும் அடுத்த சில நிமிடங்களில் வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.