புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளைக் கட்டுப் படுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அக்டோபர் மாதம் வரை அனைத் துலக நிதி நடவடிக்கை கண்கா ணிப்பு அமைப்பு கெடு விதித்து உள்ளது.
பயங்கரவாத நிதி உதவிகளைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் பாகிஸ்தானைக் கருப்புப் பட்டிய லில் வைக்க நேரிடும் என்று ஏற் கெனவே அந்த அமைப்பு தெரி வித்திருந்த நிலையில் தற்போது அதற்கான காலக்கெடுவும் விதிக் கப்பட்டுள்ளது.
அனைத்துலக நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 2018ஆம் ஆண்டு நடந்த 'க்ரே பட்டியலில்' பாகிஸ்தானைச் சேர்த்தது.
கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அனைத்துலக அளவில் பல கட்டுப்பாடுகளுக்குப் பாகிஸ் தான் உள்ளாகும்.
பாகிஸ்தானை மையமாக வைத்துச் செயல்பட்டு வரும் ஹஃபீஸ் சயீத், மசூத் அசார் மற்றும் ஐநா பட்டியலிட்டுள்ள பல தீவிரவாதிகள் மீது அந்நாடு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து குற்றச் சாட்டுச் சுமத்தி வருகின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், "எப்.ஏ.டி.எப் விதிமுறை களுக்குப் புறம்பாக பாகிஸ்தானின் செயல்பாடு உள்ளது. குறிப்பாகத் தீவிரவாதிக்கு நிதி சார்ந்து ஒத்து ழைப்புக் கொடுப்பது. இது குறித்து இந்தியா, அனைத்துலக அரங்கில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகி றது" என்று கூறினார்.

