காலேஸ்வரம்: தெலுங்கானா மாநி லத்தின் 70 விழுக்காடு மக்க ளுக்குக் குடிநீர், ஆண்டிற்கு 45 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் பாசனம் போன்ற நன்மைகளைக் கொண்ட காலேசுவரம் நீர்ப்பாசனத் திட்டத்தைத் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.
ஜெய்சங்கர்-=பூபால்பள்ளி மாவட்டத்தின் காலேசுவரம் கிரா மத்தில் சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் இத்திட்டத்தை மக்க ளுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர, தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
உலகிலேயே மிகப்பெரிய இறைவை பாசனத் திட்டமாகக் கருதப்படும் இத்திட்டத்தின் மூலம் தண்ணீர்ப் பஞ்சம், விவசாய பிரச் சினை, நீர் மேலாண்மை என தெலுங்கானாவின் முக்கிய சவால் களுக்கும் தீர்வு கிடைக்கும்.
காலேசுவரத்தில் தொழில்நுட்ப அதிசயங்கள் ஏராளம்.
இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரியில் இருந்து கிராவிட்டி கால்வாய் மற் றும் சுரங்கங்கள் மூலம் 1,832 கி.மீ. தூரம் பரந்து விரிந்துள்ளது நீர்ப் பாதை.
இறைவை தொழில்நுட்பம் மூலம் கடல் மட்டத்திற்கு 100 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள மெடிகடா என்ற இடத்தில் இருந்து தினமும் 2 டி.எம்.சி. நீரை இறைத்துக் கடல் மட்டத்தில் இருந்து 612 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள கொண்டபோச்சம்மா சாகர் அணையைச் சென்றடைகி றது.
இதுபோன்ற பல்வேறு அம்சங் களைக் கொண்டுள்ள காலேசுவர திட்டத்தை நிறைவேற்ற அந்த மாநிலம் எடுத்துக்கொண்ட காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள் ளது. இதற்கு அதிகாரிகளின் துடிப்பான செயல்பாடும் முதல் வரின் நேரடி வழிகாட்டுதலும் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
மேலும் 80 ஆயிரம் கோடி செலவில் உருவான காலேசுவர திட்டம் மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் உருவான மிகப் பெரிய திட்டம் என்பதும் குறிப் பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் நீர் மேலாண்மைக்காக மிஷன் பாகிரதா, சீதா= ராமா திட்டம், பாலமுறு ரங்கா ரெட்டித் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

