அமராவதி: திருப்பதி கோயில் நிர்வாகத்தின் புதிய தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் இதற்கான உத்தரவை நேற்றுப் பிறப்பித்தார்.
திருப்பதி நிர்வாக தலைவராக நேற்று சுப்பா ரெட்டி பதவியேற்பார் என்று கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து நிர்வாக கமிட்டியின் பிற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர அரசு தெரி வித்துள்ளது. நியமன பதவியான திருப்பதி கோயில் நிர்வாக தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும்.
மிகவும் செல்வாக்கு மிக்கபொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்கு கிறது.சுப்பா ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் தாய்வழி மாமா என்றும் கூறப்படுகிறது.

