இந்தியாவில் சமய சகிப்புத் தன்மை குறைந்து வருவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தியா நிரா கரித்துள்ளது.
சமய அடிப்படையில் தேசிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவில் சிறுபான் மையினரும் தலித்துகளும் வன் முறை, அச்சுறுத்தல் மற்றும் துன் புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று 'அனைத்துலக அளவில் சமயச் சுதந்திரம்' என்ற அமெ ரிக்காவின் வருடாந்திர அறிக் கையில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால், தனது நிலைப்பாடு பற்றி விமர்சிக்க வேறு எந்த நாட்டிற்கும் உரிமையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்காக அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நாளை அங்கு செல்லவிருக்கிறார்.
இந்நிலையில், வரிகள், தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள் உள் ளிட்ட பல அம்சங்களில் ஏற் கெனவே அவ்விரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வரும் நிலையில், சமய சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை யால் அது மேலும் மோசமடை யலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித் துள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை சமயத்தவர் மீதும் தலித்துகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெறு வதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
"கடந்த ஈராண்டுகளாக இன ரீதியிலான வன்முறை அதிக ரித்து இருப்பதாக இந்திய அர சாங்கத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனாலும், அதைக் கட்டுப்படுத்த மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஏற்க மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சு, "எமது குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி வழங் கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து விமர்சிக்க வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிநாட்டு அமைப்பு களுக்கோ உரிமை இல்லை," எனப் பதிலுரைத்துள்ளது.
"இந்தியா தனது சமயச் சார்பற்ற நிலை குறித்தும் பன் முகத்தன்மைமிக்க சமூகத்தைக் கொண்டிருப்பதையும் எண்ணி பெருமிதம் கொள்கிறது," என்று வெளியுறவு அமைச்சின் பேச்சா ளர் ரவீஷ் குமார் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
"இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் அடிப்படை உரி மைகளுக்கு உத்தரவாதம் அளிக் கிறது," என்றார் அவர்.

