'இந்தியர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில்லை'

'இந்தியர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில்லை'

2 mins read

மும்பை: உலகிலேயே நீரிழிவு நோயில் இந்தியா முதலிடம் வகிக் கிறது. அதேவேளையில், அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு அந்த நாடு முழுவதுமே போதிய அளவுக்கு இல்லை.

ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க் கரையைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையை அந்த நாட்டு மக்கள் உணர்ந்திருப்பதாகத் தெரிய வில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அகில இந்திய ரீதியில் ரத்த சர்க்கரை சராசரி அளவை மூன்று மாத காலத்தில் நிர்ணயிப்பதற்காக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதம் அந்த அளவு 8.5% ஆக இருந்தது.

இது வழக்கமான சர்க்கரை அளவைவிட 3% அதிகம் என்று நாடளாவிய முறையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மும்பை முதல் கோல்கத்தா வரை, டெல்லி முதல் சென்னை வரையிலான நகரங்களைப் பார்க் கையில் நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவற்கான முயற்சிகள் மக்க ளிடையே போதிய அளவுக்கு இல்லை என்பது தெரியவருகிறது.

நோவோ நூர்டிஸ்க் கல்வி அறநிறுவனம் என்ற அமைப்பு 28 நகர்களில் 1.8 லட்சம் நோயாளி களை உள்ளடக்கி ஓராண்டு காலமாக ஆய்வு நடத்தி வருகி றது. அந்த ஆய்வின் ஒரு பகுதி யாக இந்த நிலவரங்கள் தெரிய வந்து இருக்கின்றன.

சென்னை மக்களிடையே ரத் தத்தில் சராசரி சர்க்கரை அளவு 8.4%லிருந்து 8.2% ஆக ஓராண்டு காலத்தில் குறைந்து இருக்கிறது என்றும் ஆய்வு குறிப் பிடுகிறது. இருந்தாலும் இந்த அளவு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 2017 கணக் கின்படி 72.9 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 80% மக்கள் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளைப் பெறுவதில்லை.

நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக இந்தியாவில் 2017ல் மட்டும் ரூ.63,000 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் இதில் விரும்பிய பலன் இன்னமும் ஏற்படவில்லை. மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதற்குக் காரணம் என ஆய்வு கூறுகிறது.