வேறு சாதி திருமணம்: சகோதரியைச் சுட்டுக்கொன்ற தம்பி

வேறு சாதி திருமணம்: சகோதரியைச் சுட்டுக்கொன்ற தம்பி

1 mins read
Google News Preferred Icon

இந்தூர்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன்னுடைய சகோதரி வேறு ஒரு சாதியைச் சேர்ந்த ஆடவரை மணம் புரிந்ததற் காக அந்த 21 வயதுப் பெண்ணை அவருடைய தம்பி நெற்றியில் சுட்டுக்கொன்றுவிட்டார்.

இந்தூர் மாவட்டத்தில் இருக் கும் ரவாத் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

புல்புல் என்ற அந்தப் பெண் அதே ஊரைச் சேர்ந்த குல்தீப் என்பவரைக் காதலித்து ஆறு மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு மண மக்கள் இருவரும் வேறு ஊருக்குச் சென்றுவிட்டனர்.

இருந்தாலும் புல்புல் சனிக் கிழமை குல்தீப்பின் வீட்டிற்கு வந்தபோது அந்தப் பெண்ணின் 17 வயது தம்பி அவரை நெற்றியில் சுட்டுக்கொன்றுவிட்டார் என்று போலிஸ் தெரிவித்தது.

சுடப்பட்டதும் புல்புல் அருகில் உள்ள நகரில் இருக்கும் மருத்துவ மனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் ஆனால் வழியிலேயே அவர் மாண்டுவிட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர்.

புலன் விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது. 2019-06-24 06:00:00 +0800

பாஜகவின் நவராத்திரி கொண்டாட்டம்

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசை ஓரங்கட்டிவிட்டு அம்மாநில மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற பாஜக இப்படி வியூகம் வகுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.