ஜார்க்கண்ட்: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்ததால் சித்திரவதை: 11 பேர் கைது

ஜார்க்கண்ட்: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்ததால் சித்திரவதை: 11 பேர் கைது

2 mins read

புதுடெல்லி: இந்து மதத்துக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்ப மறுத்த இஸ்லாமியரை சித்திரவதை செய்து, அவரது மரணத்துக்கு காரணமான 11 பேரை போலிசார் கைது செய்துள் ளனர். இச்சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

24 வயதான தப்ரேஸ் அன்சாரி என்ற அந்த இளையர் அம்மாநிலத் தில் உள்ள கிராமம் ஒன்றில் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கிராம மக்களால் பிடித்து வைக்கப்பட்டார். பின்னர் அவரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து சர மாரியாகத் தாக்கிய சிலர், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுமாறு வற்புறுத்தி உள்ளனர்.

மிகக் கொடூரமாகத் தாக்கப்பட் டதால் வேதனை தாங்காமல் அலறித் துடித்துள்ளார் அன்சாரி. எனினும் இரக்கம் காட்டாத அக்கும்பல் தொடர்ந்து சுமார் 12 மணி நேரம் அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள் ளது.

அதன் பின்னர் தகவல் அறிந்து அவரை மீட்ட போலிசார், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரை சிறையில் அடைத்ததாக அன்சாரி யின் மனைவி புகார் எழுப்பியுள் ளார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி, சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைதாகி உள்ளனர். போலி சார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அன்சாரி தாக்கப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

வலதுசாரி ஆதரவாளராகக் கருதப்படும் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங் கள் அதிகரித்துள்ளதாக அமெ ரிக்கா தெரிவித்துள்ளதை இந்திய அரசு மறுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தப்ரேஸ் அன்சாரியின் மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.