ஜெய்சங்கர் மாநிலங்களவை தேர்தலில் மனுத்தாக்கல்

1 mins read
07a86d18-e805-4da6-af11-6d69b0aa8560
மனுத்தாக்கல் செய்ய வந்த ஜெய்சங்கர். படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பாஜகவில் தம்மை இணைத்துக்கொண்டார். இதையடுத்து குஜராத் மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதற்கான வேட்புமனுவை நேற்று முன்தினம் அவர் தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலங்க ளவைத் தேர்தல் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய வெளியுறவுத் துறை யின் செயலராக பதவி வகித்து திறம்படச் செயல்பட்டவர் ஜெய்சங்கர். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய வெளியுறவுத் துறை சார்பாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவில் இணைந்து மாநிலங்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

ஜெய்சங்கருக்கு அரசியல் தொடர்பு ஏதும் இல்லை. வெளியுறவுத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டதால் அமைச்சராக்கப் பட்டுள்ளார். எம்பிக்களாக இல்லாமல், மத்திய அமைச்சராகப் பதவி ஏற் பவர்கள் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை அல்லது மக்களவை மூலம் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போது மட்டுமே அவர்களால் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.