இந்திய-அமெரிக்க உறவில் அண்மையில் சில உரசல்கள் ஏற்பட்டுள்ள வேளையில் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகள் ஆராயப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்பு, வர்த்தக உறவு, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, ஈரானிலிருந்து கச்சா எண் ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் விவகாரம், ஹெச்-1பி விசா, பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளும் இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள 'எஸ்-400' ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்த அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளியல் தகுதியை விலக்கிக்கொண் டது. இந்தியாவும் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்கு வரி உயர்வை அறிவித்தது. அதே சமயத்தில் அண்டை நாடான சீனா அசுர பலத்துடன் இருப்பதால் அதனைச் சமாளிக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் போடப் பட்டதாகவும் இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஈரானிலிருந்து கச்சா எண் ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக் கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா வுடன் உறவைச் சீர்ப்படுத்தும் நோக்கோடு பொம்பியோ இந்தியா வந்துள்ளார். இம்மாதம் 28, 29 தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் 'ஜி20' மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்திக்கவிருப்பதால் பொம்பியோவின் பயணம் ஒரு முன்னோட்டமாகவும் அமை கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் நேற்று மைக் பொம்பியோ சந்தித்தார்.
இதில் முக்கியமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவும் 'ஹெச்-1பி' விசா பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. முன்னதாக செவ் வாய் இரவு புதுடெல்லியில் தரை இறங்கிய மைக் பொம்பியோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.