டிரம்ப்: இந்தியாவுடன் இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை

டிரம்ப்: இந்தியாவுடன் இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை

1 mins read
517723bc-10c1-4622-960f-8d4b547a86d4
-

இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையே இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஜப்பானின் ஒசாகா நகரில் தற்போது நிகழும் ஜி20 உச்சநிலை மாநாட்டுக்கு இடையே சந்தித்தபோது திரு டிரம்ப் அவ்வாறு கூறினர்.

"என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். இதுவரை நாம் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை," எனத் திரு டிரம்ப் கூறினார். திரு மோடியின் இரண்டாவது பொதுத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன்முறையாகத் திரு டிரம்ப்பைச் சந்திக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இந்தியாவுக்கு வருகையளித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா பல்லாண்டுகளாக அதிகமான வரிகளை விதிப்பது குறித்து தாம் திரு மோடியிடம் பேசப்போவதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார்.