ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய அரசாங்கம் நிறைய செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். சட்ட ஒழுங்கு முன்னேறியுள்ள பட்சத்தில் அங்கு மாநிலத் தேர்தல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடத்தப்படலாம் என அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் அதிபர் ஆட்சியை நீட்டிப்பது குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மெஹ்பூபா முஃப்தியின் கட்சியுடன் ஆளுங்கூட்டணியில் இணைந்திருந்த பாஜக அந்தக் கூட்டணியை கடந்தாண்டு ஜூன் மாதம் முறித்ததில் அந்த மாநிலம் ஆளுநர் நிர்வாகத்திற்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. தேர்லை இவ்வாண்டு இறுதியில் நடத்த அதிபர் ஆட்சி மேலும் நீட்டிக்கப்படவேண்டும்.
"ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க அரசாங்கம் நிறைய செய்திருக்கிறது. பயங்கரவாதத்தை முற்றிலும் சகியாதிருக்கும் போக்கு இப்போது நிலவுகிறது," என்றார் திரு ஷா

