பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரி வித்த இரு பெண்களுக்கு தலை மொட்டையடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தாயும் மகளும் தங்கியிருந்த வீட்டில் புகுந்த கும்பல் அவர்க ளிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரு பெண்களும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடைய விருப்பத்துக்குப் பணிய மறுத்தனர்.
இதனால் இரு பெண்களையும் தண்டிக்கும் விதமாக மொட்டை யடிக்கப்பட்டு கிராமத்தில் ஊர்வல மாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பிபிசி வெளியிட்ட செய்தி தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஐவரை போலிசார் தேடி வரு கின்றனர்.
இந்திய ஊடகத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட தாயார், குச்சியால் அடித்து உதைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
"என்னுடைய உடம்பு முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடைய மகளும் காயம் அடைந்தாள்," என்று அவர் கூறி யுள்ளார்.
சம்பவம் குறித்து விளக்க மளித்த போலிஸ் அதிகாரி ஒருவர், வீட்டில் சிலர் நுழைந்து மகளை மானபங்கப்படுத்த முயற்சி செய்தனர். தடுக்க வந்த தாயாரையும் அவர்கள் அடித்துள்ளனர் என்றார்.
இதன் தொடர்பில் ஐந்து பேர் தேடப்படுவதாகவும் அவர் சொன்னார்.
மொட்டையடிக்கப்பட்ட இரு பெண்கள். படம்: இந்திய ஊடகம்

