ஒரே 'ரேஷன் கார்டு' விரைவில் அமலாகும்

2 mins read

புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்தி லும் அந்தந்த மாநிலங்களின் அர சாங்கங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றன.

இந்த நிலையில் அனைத்து மாநிலங்களின் பங்கீட்டு அட்டை திட்டத்தை 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என்ற பெயரில் ஒருங்கிணைக்க கடந்த ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் பொது விநியோக பங்கீட்டு அட்டை தொடர்பான தகவல்களை பெற்று கணினியில் பதிவு செய்து மிகப்பெரிய புள்ளி விவர தரவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்தச்சூழ்நிலையில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் பற்றி நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமை யில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் 'ஒரே நாடு ஒரே பங்கீட்டு அட்டை' திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

"இந்தியாவில் சுமார் 81 கோடி பேர் மானிய விலையில் அத்தியாவசிய உணவு தானியப் பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பில் ் உள்ளதாக தெரி வித்தார்.

"தானியப் பொருட்களை அரசு வாங்குவது முதல் மக்களுக்கு விநியோகம் செய்வது வரை அனைத்தையும் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்புக்குள் கொண்டு வந்தால் முறைகேடுகளை முழுமையாக தடுக்க முடியும்.

"ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் திட்டம் மூலம் பொதுமக்கள், நாட்டில் எந்த மாநிலத்திலும் எந்த ஒரு ரேஷன்் கடையிலும் சென்று எளிதாக தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற முடியும். அனைத்து மோசடிகளும், ஊழல்களும் ஒழிக்கப்படும். குறிப்பாக ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டை வைத்திருப்பது தடுக்கப்படும் என்று மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் விளக்கம் அளித்தார்.