கேரளாவில் சாலை விபத்து: கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி

கேரளாவில் சாலை விபத்து: கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி

1 mins read

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு ஆம்னி வேன் ஒன்றில் சென்று கொண்டு இருந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் சாலை விபத்தில் சிக்கினர்.

அவர்களின் வாகனம் பாலக்காடு அருகே சென்றபோது அதன் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட நால்வர் அதே இடத்திலேயே உயிர் இழந்தனர். இதர எட்டு பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கள். தகவலறிந்து விரைந்த போலிசார், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.