புதுடெல்லி: வானொலியில் 'மன் கி பாத்' எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ஒவ் வொரு மழைத்துளி நீரையும் சேகரிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.
அதோடு கேதர்நாத்துக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் நோக்கத்தையும் அவர் தெரிவித் துள்ளார்.
"மழை நீரில் நம்மால் 8 விழுக்காடு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவே ஜல் சக்தித் துறை உருவாக்கப்பட்டது.
"தண்ணீர்ப் பிரச்சனையைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன். பல்வேறு கிராம தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
"அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொது மக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மைக் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்," என்று திரு மோடி கூறினார்.
"நாட்டு மக்கள் ஜனநாய கத்தைக் காப்பாற்ற இரண்டாவது முறையாகப் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.
"சிறப்பாகத் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்தை பாராட்டு கிறேன்.
"எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார் நாத் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த மாதம் கேதர்நாத்துக்குப் பயணம் மேற்கொண்ட திரு மோடி அங்குள்ள குகையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அந்த குகையில் தியானம் செய்ய விரும்பும் பலர் இணையம் வழியாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

