பதவி போனதால் கலங்கிய சட்டீஸ்கர் முதல்வர்

பதவி போனதால் கலங்கிய சட்டீஸ்கர் முதல்வர்

1 mins read
a8e996a0-98b2-4e15-9031-eee916009f12
முதல்வராக இருந்தாலும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுக்க மனமில்லாததால் கண்கலங்கிய பூபேஷ் பாகேல். படம்: இந்திய ஊடகம்   -

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கண்கலங்கியபடி பேசியது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சட்டீஸ்கர் மாநில முதல் வராகவும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பூபேஷ் பாகேல் இருந்து வருகிறார்.

அம்மாநிலத்தில் அவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவிய தால் கட்சித் தலைமையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு வரு கின்றன.

இதன் ஒரு பகுதியாக அவர் வகித்து வந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த மோகன் மார்கம் நியமிக்கப்பட்டார். காங் கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர் கே.சி.வேணுகோபால் இதனை அதிகாரபூர்வமாக அறி வித்தார்.

இதையடுத்து கட்சித் தலைமை பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பூபேஷ் பாகேல், கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் பணி யாற்றிய தொண்டர், தலைவர் களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் தன்னுடன் பணியாற்றியவர்களைப் பற்றி நினைவு கூர்ந்து கண் கலங்கியபடி அவர் பேசியது கூடியிருந்த தொண்டர்களையும் கண்கலங்க வைத்தது. கடந்த 2013 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் என்னை ராகுல் காந்திஜி தலைவர் ஆக் கினார். 2014 பொதுத் தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் கட்சியின் நலன்கள் பற்றி கவலை ஏற்பட்டது. 2014க்குப் பின் சட்டீஸ் கரில் நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது," என்றார்.