புதுடெல்லி: புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரத் ஜஹான் செவ்வாய்க் கிழமை அன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அண்மையில் துருக்கியில் வர்த்தகரான நிக்கில் ஜெயினை அவர் திருமணம் செய்துகொண் டார்.
இதனால் இம்மாதம் நாடாளு மன்ற கூட்டத் தொடர் தொடங்கிய போது அவரால் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் நடிகையாக இருந்த அரசியல்வாதியாக மாறி யுள்ள நஸ்ரத் ஜஹான் பதவியேற்று வந்தே மாதிரம், ஜெய் ஹிந்த், ஜெய் பங்ளா என்று முழங்கினார்.
பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சென்று காலைத் தொட்டு அவர் ஆசி பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே அவர் புடவை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து பதவியேற்றதை சிலர் குறைகூறியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த நஸ்ரத் ஜஹான், "நான் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பிரதி நிதிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
"அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை பிரதிநிதிப்பது சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டது.
"எல்லா சமயங்களையும் மதிக் கிறேன். இருப்பிரும் முஸ்லி மாகவே இருப்பேன். நான் என்ன அணிய வேண்டும் என்று மற்ற வர்கள் கூற முடியாது.
"நம்பிக்கை என்பது ஆடை களுக்கு அப்பாற்பட்டது," என்று டுவிட்டர் பதிவில் நுஸ்ரத் ஜஹான் தெரிவித்தார்.

