கேரளாவில் மாயமான சுற்றுப்பயணி

கேரளாவில் மாயமான சுற்றுப்பயணி

1 mins read
e6176b75-995d-4c15-9e88-b9d6c78a1616
-

இந்தியாவின் கேரள மாநிலத்தில் காணாமல் போன ஜெர்மானியப் பெண் சுற்றுப்பயணியைத் தேடிக் கண்டுபிடிக்க அந்நாட்டு போலிசார் முயன்று வருகின்றனர். லிஸா என்ற அந்த 31 வயது பெண் வீடு திரும்பவில்லை என்று அவரின் பெற்றோர் இந்தியாவின் ஜெர்மானியத் தூதரகத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் தொடங்கின.

மார்ச் மாதம் 7ஆம் தேதி லிஸா திருவனந்தபுரம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் கொல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள பெண் சாமியார் அமிர்தானந்தமாயியின் ஆசிரமத்திற்குச் செல்லவிருந்ததாக அவரது குடிநுழைவு பத்திரங்கள் குறிப்பிட்டன. ஆனால் லிஸா ஆசிரமத்திற்குச் சென்று சேரவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்.

லிஸா, பிரிட்டிஷ் கடப்பிதழை வைத்திருக்கும் தமது நண்பர் முகம்மது அலியுடன் மோட்டார் சைக்கிளில் கடைசியாகக் காணப்பட்டதாக போலிசாருக்குக் தகவல் வந்தது. மார்ச் மாதம் 15ஆம் தேதி முகம்மது அலி கொச்சின் விமான நிலையத்தின் வழியாக இந்தியாவைவிட்டு வெளியேறியதாகப் பின்னர் தெரிய வந்தது.