சூரிய, காற்று எரிசக்தித் திட்டங்கள் இந்தியாவின் மொத்த எரிசக்தி ஆற்றலில் பாதிக்கு மேலாக அங்கம் வகிக்கும் என்று அந்நாட்டின் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் மின்சார ஆற்றல் 831 கிகாவாட் ஆக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதில் 440 கிகாவாட் மின்சாரம், சூரிய சக்தியையும் காற்றையும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த முன்னுரைப்பு நிறைவேறினால், 2030க்குள் 40 விழுக்காடு மின்சாரம் பசுமைத் தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்படவேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வகுத்திருக்கும் இலக்கு தாண்டப்படும். தற்போதைய திட்டத்தின்படி, இந்திய அரசாங்கம் 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகாவாட் புதுப்பிக்கப்படக்கூடிய மின்சார ஆற்றலை நிறுவத் திட்டமிடுகிறது.

