கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் மும்பை

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் மும்பை

2 mins read
b5907827-1cc0-40ca-9b30-5dfcbb465433
மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.   படம்: ஏஎப்பி -

மும்பை: கடந்த ஐந்து தினங்களாக நீடித்து வரும் கனமழை காரண மாக ஒட்டுமொத்த மும்பை மாநகர மும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதி களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்துக் கட்டுகிறது.

இதனால் மாநகரின் முக்கியப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

சாலையில் ரயில் தண்டவாளங் கள் மழை நீரில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நான்காவது நாளாக நீடித்த தொடர் மழையால் மும்பையில் 360 மில்லி மீட்டருக்கும் அதிக மான மழை பதிவாகி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழு வதும் கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் 100 மில்லிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

தாதர், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகனமோட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஏராளமான வாகனங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் அவை சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சில தனியார் பள்ளிகள் இயங்கிய போதும், மாணவர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

தண்டவாளங்கள் மூழ்கியதால் பல ரயில்கள் ரத்தாயின. சில ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த கனமழை எப்போது முடிவுக்கு வரும் என மும்பைவாசிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.