அரசியல் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அமித் ஷா வலியுறுத்து

அரசியல் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த அமித் ஷா வலியுறுத்து

2 mins read

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத் தில் நடைபெறும் அரசியல் படு கொலைகளை அம்மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்ப தமக்கும் மத்திய உள்துறை அமைச்சுக்கும் முழு உரிமை உள் ளது எனவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அறிவுறுத்தும் மத்திய அரசு ஏன் மூளைக்காய்ச்சல் பலிகள் தொடர்பாக பீகார் மாநிலத் துக்கு அத்தகைய அறிவுறுத்தல் களைச் செய்யவில்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான டெரக் - ஓ பிரியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, சுகா தார பிரச்சினைகள் தொடர்பாக தமது அமைச்சு அறிவுறுத்தல்கள் வழங்காது என்றார்.

"மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சு எந்தவோர் அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. மாறாக அரசியல் படுகொலைகள் குறித்து மட்டுமே வலியுறுத்தப்பட்டது.

"இத்தகைய படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மாநில முதல்வரின் பொறுப்பாகும். அதே வேளையில் அரசியல் படு கொலைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்க மத்திய உள்துறை அமைச் சுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இப்படுகொலைகள் உட னடியாக தடுத்து நிறுத்தப்படும்," என்று அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் படுகொலைகள் என் பன ஆரோக்கியமான ஜனநாயகத் துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும், நாடாளுமன்றத்தில் கேள் விகளை எழுப்புவதைக் காட்டிலும் கொலைகள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதே நன்மை பயக்கும் என்றும் அமித் ஷா மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, காஷ்மீர் பிரி வினைவாதிகள் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளை மூடிவிட்டு, தங்கள் குழந்தைகளை மட்டும் வெளிநாடுகளுக்கு அனுப்பி நன்றாகப் படிக்க வைப்ப தாகவும் அமித் ஷா மேலும் சாடி உள்ளார்.