புதைக்கப்படும் தறுவாயில் உயிர்த்தெழுந்த ஆடவர்

புதைக்கப்படும் தறுவாயில் உயிர்த்தெழுந்த ஆடவர்

1 mins read
feb6cfff-f475-4148-b0ca-bde8ac861903
-

மும்பை, இந்தியா: கல்லறை தயாராகி அவரது உடல் புதைக்கப்படும் தறுவாயில் ஆடவர் சிறிது சிறிதாக அசைந்துகொண்டிருந்ததைக் குடும்ப உறுப்பினர்கள் கண்டனர். உடனே அவர்கள் அந்த ஆடவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த ஆடவருக்கு உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 21ஆம் தேதி விபத்திற்குள்ளான 20 வயது முகம்மது ஃபுர்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் மாண்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

அவரது குடும்ப உறுப்பினர்கள், மருத்துவமனைக்கு ஏழு லட்ச ரூபாயைக் கொடுத்த பிறகு ஃபுர்கானின் சிகிச்சைக்குப் பணம் இல்லை என்று மருத்துவர்களிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் அதன் பிறகு ஃபுர்கான் இறந்துவிட்டதாக அந்த மருத்துவர்கள் அறிவித்ததாகவும் சொல்கின்றனர்.