புதுடெல்லி: லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற காற்பந்து ஜாம்பவான்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இப்போது இணையத்தில் தனக்கென ரசிகர் கூட்டத்தைச் சேர்க்க முயல்கிறது ஒரு மாடு!
காற்பந்து விளையாடும் சிறுவர்களுக்கு அருகே மாடு ஒன்று நின்றுகொண்டிருந்ததைச் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் காணொளி ஒன்று காட்டுகிறது. சிறுவர்கள் எத்திய பந்து அந்த மாட்டின் கால்களுக்கு முன் நின்றது. அந்தப் பந்தை எடுக்க முயன்றார் ஒரு சிறுவன். ஆனால் தன்வசம் இருந்த பந்தை அந்த மாடு விடுவதாக இல்லை. சுற்றும் முற்றும் முறைத்துப் பார்த்தது அந்த மாடு.
சற்று நேரத்திற்குப் பிறகு அந்த மாடு பந்தை மெல்ல எத்தத் தொடங்கியது. மாட்டிடமிருந்து ஒரு சிறுவன் பந்தைத் தட்டிச் சென்றான். அதன் பிறகு, அந்தச் சிறுவர்களுடன் அந்த மாடு காற்பந்து விளையாடுவது போல் காணொளியில் காணப்பட்டது. கண்முன் நடப்பதைக் காணும் சிறுவர்களுக்குத் தாங்க முடியாத வியப்பு.
பார்ப்போரை வாயைப் பிளக்கச் செய்யும் இந்தக் காணொளியால் அந்த மாட்டின் மீது சமூக ஊடகத்தில் பாராட்டு மழை பொழிந்தது.

