பெங்களூரு: அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய் வதாகவும், இது தவறான போக்கு என்றும் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி செய்தால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமத்துவத்தை ஏற்படுத்த இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமே தீர்வாகாது என்றார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் கூட்டணி அரசைக் கவிழ்க்க முயற்சி நடந்து வருவ தாகக் குறிப்பிட்ட சித்தராமையா, இதன் பின்னணியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச் சர் அமித்ஷா ஆகியோர் உள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
"கர்நாடகத்தில் உள்ள கூட் டணி அரசைக் கவிழ்க்க பாஜக புதிய திட்டம் வகுத்துள்ளது. ஆனால் அத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை என அக்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். "பிற கட்சி எம்எல்ஏக்கள் தாமாக வந்தால் மட்டுமே அவர் களை பாஜகவில் சேர்த்துக் கொள் வதாகக் கூறப்படுகிறது. உண்மை யில் பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்கிறது," என்றார் சித்தராமையா.
பாஜகவுக்கு நாட்டு மக்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்க வில்லை என்று குறிப்பிட்ட அவர், அக்கட்சி பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்வ தாக குற்றம்சாட்டினார். ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றவே பாஜக தலைமை ஆட்சி கவிழ்ப்பிற்கு முயற்சி செய்வதாக வும் அவர் சாடினார். "பதவி விலகிய எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முயற்சி செய் தேன். ஆனால் முடியவில்லை. காங்கிரசில் இருந்து வேறு எந்த எம்எல்ஏவும் பதவி விலக மாட் டார்கள். எனவே நடப்பு கூட்டணி அரசு நூறு விழுக்காடு உறுதியாக உள்ளது என்று சொல்லலாம்," என்றார் சித்தராமையா.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் வளைப்பதாக புகார் எழுந் துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென பதவி விலகி உள்ளார். இதற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

