மழை நீரில் மூழ்கிய மும்பை; முடங்கிப் போன மக்கள்

மழை நீரில் மூழ்கிய மும்பை; முடங்கிப் போன மக்கள்

1 mins read
11297382-2902-45fa-99d9-bd9bc15be21e
படம்: ஏஎப்பி -

கடந்த இரு தினங்களாக மும்பையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த மாநகரமும் முடங்கி உள்ளது.

இந்த கனமழையால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மும்பை முற்றிலுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பல மனித உயிர்களைப் பலி வாங்கியுள்ளதாக இந்த கனமழை மேலும் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. மும்பை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கி உள்ளன. வாகனப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.

படம்: ஏஎப்பி