தூத்துக்குடியில் காதல் திருமணத் தம்பதி கொலை

தூத்துக்குடியில் காதல் திருமணத் தம்பதி கொலை

1 mins read
3473617f-bbd6-4f7c-89df-61d6357247aa
-

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திக்குளம் பகுதியில் காதல் திருமணம் செய்திருந்த வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் வீட்டில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 24 வயது சோலை ராஜும் 21 வயது ஜோதியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது காதலை இருவரின் பெற்றோர்களும் எதிர்த்ததால் அந்த ஜோடி பெற்றோர்களின் சம்மதமின்றித் திருமணம் செய்தனர்.

இவர்களின் கொலைக்கு யார் காரணம் என்றும் இது சாதி வெறியால் செய்யப்பட்டதா என்றும் போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.